Home Featured உலகம் ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களாக பாலியல் சித்ரவதைக்குள்ளான பிரிட்டிஷ் பெண்!

ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களாக பாலியல் சித்ரவதைக்குள்ளான பிரிட்டிஷ் பெண்!

702
0
SHARE
Ad

Ausசிட்னி – வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒதுக்குப்புறமான நிலப்பரப்பு ஒன்றில், 22 வயதான பிரிட்டிஷ் பெண் ஒருவர், இளைஞர் ஒருவரால் இரண்டு மாதங்களாக பிணை பிடித்து வைக்கப்பட்டு, பலமுறை பாலியல் வல்லுறவும், சித்ரவதையும் அனுபவித்து வந்திருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கிராமப்புற நகரமான மிட்செல்லில், காவல்துறை அதிகாரிகளின் கார்கள் நிறுத்தப்பட்ட போது, இச்சம்பவம் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

முகத்தில் காயங்களுடனும், பார்ப்பதற்கு மிகவும் மன உளைச்சலில் இருந்த அப்பெண், அந்த வழியாகக் கார் ஓட்டி வந்திருக்கிறார். அப்போது அவரைக் கண்டு சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் காரைச் சொதனை செய்த போது, காருக்குள் 22 வயதான இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்தது தெரிய வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

விசாரணை செய்கையில், அந்த இளைஞரும், பிரிட்டிஷ் பெண்ணும் கடந்த ஜனவரி மாதத்தில் சந்தித்திருக்கின்றனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சாலை வழிப் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.

ஆனால், பயணம் செய்யத் தொடங்கும் போது, அந்த இளைஞரின் உண்மையான நோக்கம் தெரிய வந்திருக்கிறது. அதன் பின்னர், அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, அந்த இளைஞர் அவரை மிரட்டி பாலியல் வல்லுறவு புரிந்ததோடு, அவரைப் பலமுறை அடித்துக் கொடுமைப் படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து, அந்த இளைஞரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் மீது பாலியல், சித்ரவதை, போதை வஸ்து பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.