மும்பை – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது விசாரணை நடத்தி வரும் இந்திய அரசு அமலாக்க அதிகாரிகள், கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பில் ஜாகிர் நாயக்கின் சகோதரி நைலா நுராய்னியை அழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
ஏறத்தாழ 200 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் வெளிநாடுகளில் இருந்து நடத்தப்பட்டிருப்பது தொடர்பில், ஜாகிர் நாயக்கின் சகோதரியின் வங்கிக் கணக்குகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.