Home Featured நாடு பூப்பந்து: இறுதி ஆட்டத்தில் மலேசியா இணை!

பூப்பந்து: இறுதி ஆட்டத்தில் மலேசியா இணை!

896
0
SHARE
Ad

badminton-Peng Soon-Liu Ying-இலண்டன் – அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் லீ சோங் வெய் இறுதி ஆட்டத்தில் நுழைந்திருப்பதைத் தொடர்ந்து, கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் மலேசியாவின் இணை இறுதி ஆட்டத்தில் கால் பதித்துள்ளனர்.

சான் பெங் சூன்-கோ லியூ யிங் இணை, கலப்பு இரட்டையர்களுக்கான ஆட்டத்தில் முதன் முறையாக இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஜப்பானைச் சேர்ந்த யுத்தா வாத்தானாபே-அரிசா ஹிகாஷினோ இணையை இரண்டு கட்ட (செட்) ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி கொண்டு இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ள மலேசிய இணை சீனாவின் லு காய் – ஹூவாங் யாக்கியோங் இணையை இறுதி ஆட்டத்தில் சந்திக்கின்றனர்.

#TamilSchoolmychoice

2012-இல் நடைபெற்ற அகில இங்கிலாந்து போட்டிகளில் அரை இறுதி ஆட்டம் வரை வந்த இந்த மலேசிய இணை, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைப்பார்களா என்ற ஆர்வம் மலேசியர்களிடையே எழுந்திருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், 1953-இல் – அதாவது மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் – அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் மலேசிய இணை ஒன்று வெற்றி வாகை சூடியிருக்கிறது என்பதுதான். மலேசியாவின் டேவிட் சூங் – இங்கிலாந்தின் ஜூன் வைட் இணை கலப்பு  இரட்டையருக்கான வெற்றிக் கிண்ணத்தை அந்த ஆண்டில் பெற்றிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சான் பெங் சூன்-கோ லியூ யிங் இணை வெற்றி பெற்றால், சுதந்திரத்திற்குப் பின்னர் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் வெற்றி வாகை சூடும் முதல் கலப்பு இணையாக அவர்கள் திகழ்வார்கள்.