மெய்நிகர் கற்றல் கல்வி தளத்தை மலேசியா முழுக்க இவ்வாண்டு ‘YES Altitude’ எனும் திறம்பேசிகள் மூலமாகவும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ள கல்வியமைச்சு நடப்புக்குக் கொண்டு வந்திருக்கிறது. அதிவேக 4ஜி கொண்ட இணைய வசதியினையும் கல்வியமைச்சு ஏற்படுத்தித் தந்துள்ளது.
இக்கல்விக்குவியம் சுற்று வட்டாரத்திலுள்ள ஆசிரியர்கள் மத்தியில் கல்விச்சார்ந்த கலந்துரையாடலுக்கும், மெய்நிகர் கற்றல் கல்வி மேம்பாட்டிற்கும், தமிழ்க்கணிம வளர்ச்சிக்கும், நல்லதொரு உச்சத்தை வழங்கிட நல்வாய்ப்பாகும்.
21-ஆம் நூற்றாண்டு கல்வித்திட்டத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றுத் தெளிவடைய இக்கல்விக்குவியம் செயல்படும். இந்நிகழ்வு சிறப்புற நடைபெற, அனைத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும், தலைமயாசிரியர்களும் திரலாக வந்து கலந்து கொள்ளும்படி, அப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன் (படம்) அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இந்நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரியும், நெகிரி செம்பிலான் உத்தமம் ஒருங்கிணைப்பாளரும், மந்தின் ஆசிரியர் நடவடிக்கை மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.