Home Featured இந்தியா பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார் அமரீந்தர் சிங்!

1014
0
SHARE
Ad

Punjabசண்டிகர் – பஞ்சாப் மாநில முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றார் அமரீந்தர் சிங். சண்டிகரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், அவருக்கு ஆளுநர் வி.பி.சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க – அகாலி தளம் கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது.

மொத்தம் 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி, அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.

#TamilSchoolmychoice

இதனிடையே, முதல்வராகப் பதவியேற்றிருக்கும் அமரீந்தர் சிங்கிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.