புதுடெல்லி – இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் மீதான தடையை எதிர்த்து சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நீதிமன்றம் நிராகரித்தது.
ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தடை செய்வதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் உள்துறை அமைச்சிடம் இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
முன்னதாக, தேசிய விசாரணை முகமை கடந்த செவ்வாய்க்கிழமை ஜாகிர் நாயக்கிற்கு அனுப்பிய அறிக்கையில், மார்ச் 14-ம் தேதி, புதுடெல்லியில் உள்ள தங்களது தலைமையகத்தில் விசாரணைக்காக வர வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
எனினும், ஜாகிர் நாயக், கைதாவதில் இருந்து தப்பிக்க தற்போது சவுதி அரேபியாவில் பதுங்கியிருப்பதாகவும் நம்பப்படுகின்றது.