Home Featured கலையுலகம் தனது குழந்தைகளுக்காக புகை, குடியை நிறுத்த ஷாருக்கான் முடிவு!

தனது குழந்தைகளுக்காக புகை, குடியை நிறுத்த ஷாருக்கான் முடிவு!

1180
0
SHARE
Ad

shah-rukh-khan,புதுடெல்லி – தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும், தான் புகைப்பதையும், குடிப்பழக்கத்தையும் நிறுத்தப் போவதாக நடிகர் ஷாருக்கான் இந்தியா டுடே இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

50 வயதான தனக்கு 4 வயது குழந்தை (ஆப்ராம்) இருப்பதை நினைக்கும் போது, வாழ்வில் இன்னும் நல்லவைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தோன்றுவதாக ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

“என்னுடைய மற்ற குழந்தைகளிடம் எப்படி இருந்தேனோ அதே போல் அவனுடனும் (ஆப்ராம்) இருந்து நேரத்தைச் செலவு செய்ய நினைக்கிறேன். ஆம்.. அது தான் எனது கவலை. அது தான் என்னை குறைவாக புகைக்கவும், குடிக்கவும், அதிக உடற்பயிற்சி செய்யவும் தூண்டுகிறது. எல்லாவற்றையும் ( புகைப்பது, குடிப்பது) நிறுத்திவிட்டு, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முயற்சி செய்யப் போகிறேன்” என்று ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

 

Comments