Home Featured உலகம் உலகிலேயே அதிவேகமான போலீஸ் கார்களைக் கொண்ட நாடு எது தெரியுமா?

உலகிலேயே அதிவேகமான போலீஸ் கார்களைக் கொண்ட நாடு எது தெரியுமா?

1076
0
SHARE
Ad

Dubai1 அபுதாபி – உலகிலேயே அதிவேகமாகச் செல்லும் காவல்துறை வாகனங்களைக் கொண்ட நாடு துபாய் தான். அந்நாட்டின் காவல்துறை புகாட்டி வெய்ரான் ( Bugatti Veyron), பெராரி எப் எப் (Ferrarri FF) அல்லது லம்போகினி அவெந்தாடார் ( Lamborghini Aventador) ஆகிய மூன்று இரகங்களில் அதிவேகமாகச் செல்லும் ஸ்போர்ட்ஸ் கார்களைப் பயன்படுத்துவதாக சிஎன்என் கூறுகின்றது.

இந்நிலையில், உலகிலேயே புகாட்டி வெய்ரான் என்ற அதிவேகக் கார்களைக் பயன்படுத்துவதற்காக துபாய் காவல்துறைக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டிருக்கிறது.

Bukattiபுகாட்டி வெய்ரான் கார்கள் மணிக்கு 407 கிலோமீட்டர் (253 mph) வேகத்தில் செல்லக்கூடியவை. 16 சிலிண்டர்களைக் கொண்ட அக்கார்களின் எஞ்சின் 1,000 குதிரைத்திறனை உற்பத்தி செய்து, இரண்டரை நொடியில் பூஜ்ஜியத்தில் இருந்து 60 mph வேகத்திற்கு அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை.

#TamilSchoolmychoice

எனினும், துபாய் அது போன்ற ஆடம்பரக் கார்களை குற்றவாளிகளை விரட்டிப் பிடிப்பதற்காகப் பயன்படுத்துவதில்லை. துபாய் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. துபாய் பணக்காரர்கள் தங்க முலாம் பூசிய கார்களில் செல்லும் போது, அந்நாட்டு காவல்துறை இது போன்ற ஆடம்பரக் கார்களில் சென்றால் தான் மரியாதை என்கிறது துபாய் அரசு.

Dubaiஇதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அது போன்ற ஆடம்பரக் கார்களை அந்நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கியிருக்கிறது துபாய் அரசு. பெரும்பாலான பெண் காவல்துறை அதிகாரிகள் வைத்திருப்பது பெராரி, பெண்ட்லி ஆகிய கார்கள் தான்.

இதற்கு முன்பு அதிவேக போலீஸ் கார்களை வைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த நாடு இத்தாலி. லம்போகினி காலார்டோ எல்பி560-4 இரக கார்களை காவல்துறைக்கு அளித்திருந்தது. அக்கார்கள் மணிக்கு 370 கிலோமீட்டர் (230 mph) வேகத்தில் செல்லக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.