Home Featured நாடு வடகொரியாவுடன் “மிகத் தீவிரமான” பேச்சுவார்த்தையில் மலேசியா!

வடகொரியாவுடன் “மிகத் தீவிரமான” பேச்சுவார்த்தையில் மலேசியா!

704
0
SHARE
Ad

KimJongNamகோலாலம்பூர் – கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, “மிகவும் தீவிரமான” முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

“அரசாங்கம் தற்போது நடத்தி வரும் பேச்சுவார்த்தை மிகத் தீவிரமானது. நமக்கு முடிவு தான் முக்கியம். பியோங்யாங்கில் இருந்து மலேசியர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். அதோடு, சட்ட ஆட்சியின் கொள்கைகளைப் பின்பற்றும் இறையாண்மையான நாடு மலேசியா என்ற பெயரையும் நிலைநிறுத்த வேண்டும்” என்று நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தேசிய முன்னணி தலைமைத்துவக் கூட்டத்தில் நஜிப் கூறினார்.

இதனிடையே, நஜிப்பின் இந்தப் பேச்சுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், “கிம் ஜோங் நம் வழக்கில், சில பிரச்சினைகள் இருக்கிறது. அது என்னவென்று சொல்ல விரும்பவில்லை. அறிக்கை வரும் வரைக் காத்திருங்கள்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் உத்தரவின் படி, கிம் ஜோங் நம்மை, பியோங்யாங் தான் திட்டமிட்டுக் கொலை செய்திருப்பதாக தென்கொரியா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.