Home Featured தமிழ் நாடு சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார் விஜயகாந்த்!

சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார் விஜயகாந்த்!

1199
0
SHARE
Ad

06VIJAYKANTH_PG4_0_1_0சென்னை: கடந்த மார்ச் 22-ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11 நாட்கள் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு இன்று இல்லம் திரும்பினார்.

அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டார் என அவரது மனைவி பிரேமலதா கூறியிருந்தார்.

தேமுதிகவும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டாலும், விஜயகாந்த் இதுவரை அங்கு பிரச்சாரத்திற்கு செல்லாத காரணத்தினாலும், அவர் மருத்துவமனையில் இருந்து வந்த காரணத்தாலும், தேமுதிக மேடைகளில் கலகலப்பும், உற்சாகமும் குறைந்தே காணப்பட்டது.

#TamilSchoolmychoice

விஜயகாந்த் இனி ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குவார் என்பதால் அந்தத் தேர்தல் களம் மேலும் கலகலப்பு காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.