புதுடில்லி – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இந்திய வருகையை முன்னிட்டு, நேற்று புதுடில்லியில், மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நேற்று நஜிப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- விமானப் போக்குவரத்து சேவை குறித்த ஒப்பந்தம்
- யூரியா மற்றும் அம்மோனியா உற்பத்தித் தொழிற்சாலை மேம்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
- விளையாட்டுத் துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- மலேசியாவின் மனிதவள பயிற்சி மையத்திற்கும் அகமதாபாத் மையத்திற்கும் இடையிலான தொழில் பயிற்சிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இருநாடுகளின் கல்வித் தேர்ச்சிகளை அங்கீகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மலேசிய செம்பனை வாரியத்திற்கும் இந்தியாவின் இராசயன தொழில்நுட்பக் கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நவீன தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
-செல்லியல் தொகுப்பு