Home Featured உலகம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் குண்டு வெடிப்பு: மலேசிய மாணவர்கள் பாதிக்கப்படவில்லை!

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் குண்டு வெடிப்பு: மலேசிய மாணவர்கள் பாதிக்கப்படவில்லை!

889
0
SHARE
Ad

st petersburg-train blastsசெயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் – ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில், அங்கிருக்கும் மலேசிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மாரா அறிவித்திருக்கிறது.

மாரா (Majlis Amanah Rakyat ) கல்வி உதவியின் மூலம், ரஷியாவின், செயிண்ட் பீட்டஸ்பெர்க்கில் உள்ள மரைன் தொழில்நுட்ப செயிண்ட் பல்கலைக்கழகத்தில் 21 மலேசிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த போது அவர்கள் அனைவரும் விடுதியில் இருந்ததாக ரஷியாவில் உள்ள மாரா அலுவலகத்தின் இயக்குநர் சையத் சைபுதின் சையத் அக்மட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இக்குண்டு வெடிப்பில் 11 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.