Home Featured கலையுலகம் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது!

786
0
SHARE
Ad

Rakhi Sawantமும்பை – கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மகாபாரதத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சைக்குரியக் கருத்துக்களைக் கூறியதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பஞ்சாப் லுதியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதி, அவ்வழக்கு விசாரணையில் ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், ராக்கி சாவந்த் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை பிறத்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாப் காவல்துறை, ராக்கி சாவந்தை மும்பையில் அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் கைது செய்தது.