Home Featured நாடு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்!

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்!

852
0
SHARE
Ad

Rape-Pencil-Sketch (450x230)கோலாலம்பூர் – இரண்டு நாட்கள் கடும் விவாதத்திற்குப் பின்னர், மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டம் மசோதா 2017 நிறைவேற்றப்பட்டது.

பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் அச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன் படி, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து இச்சட்டம் பாதுகாக்கும் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

முன்னதாக, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இச்சட்ட மசோதாவில், குழந்தைத் திருமணம் உட்பட சில திருத்தங்களைக் கொண்டு வர, முயற்சி செய்தனர். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.