Home Featured உலகம் 59 ஏவுகணைகளைக் கொண்டு சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்!

59 ஏவுகணைகளைக் கொண்டு சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்!

981
0
SHARE
Ad

வாஷிங்டன் – சிரியாவில் நடத்தப்பட்ட இராசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருக்கிறது. இதுவரையில் 59 ஏவுகணைகளை, அந்தக் கடற்பகுதியிலுள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களிலிருந்து அமெரிக்கா, சிரியாவின் முக்கிய இராணுவ மையங்களை நோக்கிப் பாய்ச்சியுள்ளது.

குறிப்பாக, இராசாயனத் தாக்குதல்களை நடத்திய சிரியா விமானங்கள் பயன்படுத்திய விமான நிலையங்கள், இராணுவ முகாம்களைக் குறிவைத்து இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

syria-usa attack-07042017அமெரிக்கக் கடற்படையால் இன்று ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது மேலே காணும் படம். டோமோஹாக் (tomahawk) எனப்படும் ஏவுகணை, தற்போது ஸ்பெயின் நாட்டின் கடலோரத்தில் முகாமிட்டிருக்கும் யுஎஸ்எஸ் ரோஸ் என்ற கப்பலிலிருந்து பாய்ச்சப்படுவதை இந்தப் படம் காட்டுகிறது. (படம்: dpa) 

#TamilSchoolmychoice