Home Featured தமிழ் நாடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

808
0
SHARE
Ad

election_commission_of_indiaபுதுடெல்லி – வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, இரத்து செய்வதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

தேர்தல் பிரச்சாரத்தில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் பல புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த வாரம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தினர்.

அச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து தீவிர ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலை இரத்து செய்ய முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.