Home Featured நாடு மலேசியாவுக்கு வந்து விசாரணை செய்யுங்கள் – இந்தியாவிற்கு ஜாகிர் நாயக் அழைப்பு!

மலேசியாவுக்கு வந்து விசாரணை செய்யுங்கள் – இந்தியாவிற்கு ஜாகிர் நாயக் அழைப்பு!

781
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – இந்தியாவிற்குச் சென்று சரணடைந்தால், தான் சித்ரவதை செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், இந்திய அதிகாரிகள் தன்னிடம் விசாரணை நடத்த வேண்டுமானால் மலேசியாவுக்கு வரட்டும் என்று சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் தெரிவித்திருக்கிறார்.

“நான் அங்கே சென்றால், என்னை அவர்கள் சித்ரவதை செய்வார்கள். மற்ற முஸ்லிம்களுக்கு இதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரம் இருக்கிறது. என்னைக் கேள்வி கேட்க நினைத்தால், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் நேரலையில் செய்தியாளர் சந்திப்பில் நடத்துங்கள். என்னை ஏன் இந்தியாவிற்கு வரச் சொல்கிறீர்கள்? வேண்டுமென்றால் அவர்கள் இங்கே வந்து பேசட்டும். இங்கே வாருங்கள். விரும்பினால் முகத்திற்கு முகம் பார்த்து பேசுவோம். நடுநிலையான இடத்திற்கு வாருங்கள்” என்று கோலாலம்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜாகிர் நாயக் இவ்வாறு கூறினார்.

தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய அரசு, ஜாகிர் நாயக்கை கைது செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறது. எனினும், ஜாகிர் நாயக் சரணடையாமல் மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.