Home உலகம் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பராக் ஒபாமா வரவேற்பு

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பராக் ஒபாமா வரவேற்பு

635
0
SHARE
Ad

imagesஅமெரிக்கா, மார்ச் 22-ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.

இந்தத் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் டொமி வெய்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு விரிவான அளவில் உலக நாடுகள் ஆதரவளித்து வந்தது வரவேற்கத்தக்கது.

#TamilSchoolmychoice

இலங்கை நாட்டில் நல்லிணக்கம், சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டு தீர்மானம் வழியமைக்கும் என ஜனாதிபதி ஒபாமா நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் டொமி வெய்டர் தெரிவித்துள்ளார்.