Home உலகம் முஷாரப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

முஷாரப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

535
0
SHARE
Ad

imagesபாகிஸ்தான், மார்ச் 22-பாகிஸ்தானின் முன்னா‌ள் அதிபர் பெனா‌சிர் புட்டோ கொலை மற்றும் பல வழக்குக‌ள் தொட‌ர்பாக பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ன்னா‌ள் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரப்பை 10 நா‌ட்களு‌க்கு கைது செ‌ய்ய‌க்கூடாது எ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌ம் மு‌ன் ஜா‌மீ‌ன் வழ‌ங்‌கியு‌ள்ளது.

முஷாரப்பின் மீதான வழக்குகளினால், அவர் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து லண்டன் மற்றும் துபாயில் இருந்து வரு‌கிறா‌ர். மே மாதம் 11ம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்காக வரும் 24ம் தேதி அவர் பாகிஸ்தான் வருவதாக இருந்தது. இதற்கிடையில் பாகிஸ்தானில் வசிக்கும் அவரது மகளான ஆய்லா ராசா கராச்சி கோர்ட்டில் முஷாரப்புக்கு பாதுகாப்பு கோரி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 2006-ல் அக்பத் பக்தியை கொன்ற வழக்கு, 2007-ல் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கு, தென்மேற்கு பலூசிஸ்தான் போராளி தலைவர் மற்றும் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு ஆகியவை தொடர்பாக முஷரப்பை 10 நாட்களுக்கு கைது செய்ய கூடாது என ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். இந்த ஜாமீனுக்காக ரூ.3 லட்சம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது

#TamilSchoolmychoice

இந்த நீதிமன்ற ஜாமீனால் அவருடைய மகளும், கட்சி தொண்டர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.