Home Featured உலகம் ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

998
0
SHARE
Ad

Malia obamaநியூயார்க் – முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மாலியாவுக்கு, தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த 30 வயது வாலிபரை அமெரிக்கக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

கடந்த வாரம் மேன்ஹாட்டனில் மாலியா தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் அலுவலகத்திற்கு வந்த ஜேர் நில்டன் கார்டோசோ என்ற வாலிபர், சத்தமாக இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டும், மாலியாவை தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி கேட்கும் பதாகைகளையும் ஏந்திக் கொண்டும் நின்றார்.

மாலியாவின் பாதுகாப்பாளர்கள் அவரை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

அதற்கு மறுநாள் மாலியாவைப் பின்தொடர்ந்த அந்த வாலிபர், மற்றொரு கட்டிடத்தில் இருந்தபடி மீண்டும், தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில்,மாலியாவின் இரகசியப் பாதுகாவலர்கள், அந்த வாலிபரை அடையாளம் கண்டுகொண்டனர். அவர் ஒபாமா குடும்பம் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த போதே பல முறை, அந்த வாலிபர் அங்கு வர முயற்சி செய்திருக்கிறார்.

இந்நிலையில், மாலியாவின் பாதுகாவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமெரிக்கக் காவல்துறை அந்த வாலிபரைக் கைது செய்திருக்கின்றனர்.

மேலும் அவருக்கு மனநல சிகிச்சைக்கு ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது.

இதனிடையே அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யலாமா? என்றும் காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.