Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? – டெல்லி பல்கலைக்கழகம் பாடமெடுக்கிறது!

பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? – டெல்லி பல்கலைக்கழகம் பாடமெடுக்கிறது!

1144
0
SHARE
Ad

facebook1டெல்லி – பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? – இது என்னங்க புது கேள்வியா இருக்கு? அதான் தினமும் எழுதுறோமே? என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் தனது ஆங்கில துறையில், கல்விசார்ந்த எழுத்துப் பாடத்தில் பேஸ்புக்கில் முறைப்படி எழுதுவதை ஒரு பாடமாகவே வைக்கப்போகிறது என்பதோடு, பிரபல எழுத்தாளர் சேடன் பகாட்டின் ‘பைவ் பாயிண்ட் சம்ஒன்’ என்ற நாவலையும் புதிய பாடமாகச் சேர்க்கப் போகிறது.

வலைப்பூவில் எழுதுவது, கடிதங்கள் எழுதுவது உள்ளிட்ட பாடங்களோடு பேஸ்புக்கில் எழுதுவதையும் ஏன் இணைக்கக் கூடாது? என்று அப்பல்கலைக்கழக ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆலோசனை நடத்தியதையடுத்து இப்புதிய பாடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பேஸ்புக் என்பது எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எனப் பல துறைகளைச் சார்ந்தவர்கள் தங்களின் படைப்புகளை வெளியிடுவதற்கும், அதனை உலகின் பலருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் உதவும் ஒரு கருவியாக இருப்பதால், அதன் மூலம் பல வாய்ப்புகளை அவர்களைத் தேடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.