
இது குறித்து தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் டத்தோ ஜைலானி ஜோஹாரி கூறுகையில், “தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ன் கீழ் வாட்சாப் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறது. தவறான தகவல்களைப் பரப்புவது, மோசடி, இரகசியத் தகவல்களைக் கசியவிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு அரசாங்க இரகசியச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், வாட்சாப் குழு நிர்வாகிகளுக்கு அத்தகைய தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் ஜைலானி குறிப்பிட்டிருக்கிறார்.