Home Featured கலையுலகம் பாகுபலி 2 : ஒரே நாளில் 100 கோடியைத் தாண்டிய வசூல்!

பாகுபலி 2 : ஒரே நாளில் 100 கோடியைத் தாண்டிய வசூல்!

1213
0
SHARE
Ad

 

baahubali-2

புதுடில்லி – நேற்று வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் பல இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட பாகுபலி-2 திரைப்படம், இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை நோக்கி தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தின் முதல் நாள் வசூலே 100 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கின்றது. உலகம் முழுவதும் மற்ற நாடுகளின் வசூல் விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும்.

தற்போது அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படம் என்ற சாதனையை அண்மையில் வெளிவந்த அமீர்கானின் ‘டங்கல்’ படம் பெற்றது. அதற்கு அடுத்த நிலையில் சல்மான் கானின் ‘சுல்தான்’ படம் பெற்றிருக்கின்றது.

ஆனால், இந்த இரு படங்களின் வசூல் சாதனைகளும் தற்போது முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகுபலி-2 திரைப்படம் ஆந்திரா மாநிலத்தில்தான் அதிக வசூலை ஈட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.