Home Featured தொழில் நுட்பம் தமிழ்! இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி!

தமிழ்! இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி!

2424
0
SHARE
Ad

புதுடில்லி –  அனைத்துலக நிறுவனமான கேபிஎம்ஜி (KPMG) இந்தியாவில் ஏப்ரல் 2017-இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழ்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய மொழி பயனர்களில் ஏறத்தாழ 42 சதவீதத்தினர் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர் என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tamil-Ind language usage-highest-1

#TamilSchoolmychoice

இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாட்டைக் காட்டும் வரைபடம்…

அதேசமயத்தில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் இந்தி இரண்டாவது இடத்திலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் கன்னடம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

பெங்களூர் கணினி, இணையத் தொடர்பு மையமாக உருவாகியிருப்பதும், அங்கு உள்நாட்டு கர்நாடக மாநிலத்தவர் அதிகமாகப் பணிபுரிவதும் இதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

தமிழ் மொழியை அதிகம் நாடுபவர்களின் எண்ணிக்கை உயர்வு

Tamil-Ind language usage-highest-2மேற்குறிப்பிடப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரசியமான முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில:

  • தமிழ் மொழியை இணையத்தில் நாடுபவர்களின் ஈர்ப்பும் தமிழ் மொழி பேசுபவர்களிடையேதான் அதிகமாக இருக்கின்றது. இந்திய மொழி பேசுபவர்களில் ஏறத்தாழ 74 சதவீதத்தினர் தமிழ் மொழி சூழல் கொண்ட இணையப் பயன்பாட்டுக்கு மாறுவதில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.
  • தமிழுக்கு இணையாக கன்னடம் பேசுபவர்களும் 74 சதவீதம் அளவில் அவர்களின் மொழியில் இணையச் சூழலை நாடுபவர்களாக இருக்கின்றனர்.
  • 2021-ஆம் ஆண்டுக்குள் இந்திய மொழிகளை இணையத்தில் பயன்படுத்துவோரில் 30 சதவீதத்தினர் தமிழ் மொழியில் பயன்படுத்துவர்.
  • 2021-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் இணையத்தில் இந்தி மொழியைப் பயன்படுத்துபவர்கள் ஆங்கில மொழி பயனர்களை விட அதிகமாக இருப்பார்கள்.
  • 2021-ஆம் ஆண்டுக்குள் இணையத்தில் இந்திய மொழிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 561 மில்லியனாக உயரும்.

Tamil propensity-internet-KPMG researchஇணையத்தில் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ்தான் முன்னிலை வகிக்கின்றது எனப் பரவலாக அறியப்பட்டாலும், அனைத்துலக ஆய்வு நிறுவனமான கேபிஎம்ஜியின் இந்த ஆய்வு முடிவுகள் அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த ஆய்வுகள் இந்தியாவில் மட்டும் மேற்கொள்ளப்பட்டதாகும். உலகின் மற்ற நாடுகளிலும் தமிழ் மொழியை இணையத்தில் அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆகிய நாடுகளில் மிக அதிகமான அளவில் இணையத்தில் தமிழின் பயன்பாடு அதிகரித்திருக்கின்றது.

இந்த எண்ணிக்கையையும் சேர்த்தால், உலக அளவிலும், இணையத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழாகத்தான் இருக்கும் எனக் கருதப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு