கோலாலம்பூர் – சமயப்பள்ளி மாணவர் இறந்த வழக்கில், அவரைச் சித்ரவதைப் படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்பள்ளியின் உதவி வார்டனுக்கு எதிராக இன்னும் கடுமையான வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
விசாரணை அறிக்கையை அரசாங்கத் துணை வழக்கறிஞர் பார்வையிட்ட பிறகு அந்நபர் விடுவிக்கப்பட்டதாகவும் காலிட் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஆதாரங்கள் தேங்கி இருக்கின்றன. எனவே விசாரணை அறிக்கை கூடுதல் விவரங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனினும், இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், கொலை வழக்காகத் தான் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது” என்று இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலிட் கூறினார்.