புதுடெல்லி – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிபதி கர்ணனை சிறைக்கு அனுப்பவில்லை என்றால், நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத்தை அவமதித்தார் என்ற களங்கம் ஏற்படும் என்று 7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்குத் தலைமை வகித்த சிஜெஐ ஜெஎஸ் கேஹார் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், உச்சநீதிமன்றத்தால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் குறித்த புகார் ஒன்றை பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்காமல் ஊழல் புகார் சுமத்திய கர்ணனின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.