Home Featured நாடு மலாக்காவில் வாக்காளர் தொகுதி மாற்ற நடவடிக்கைக்கு நீதிமன்றத் தடை!

மலாக்காவில் வாக்காளர் தொகுதி மாற்ற நடவடிக்கைக்கு நீதிமன்றத் தடை!

1021
0
SHARE
Ad

SPR 1

மலாக்கா – மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதி வாக்காளர் மாற்றங்களுக்கு மலாக்கா மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை மலாக்கா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து மலாக்கா மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களைத் தொகுதி மாற்றுவது தொடர்பில் மே 18-ஆம் தேதி நடைபெறவிருந்த வாக்காளர்களின் ஆட்சேபக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த பின்னர் நீதிபதி வசீர் அலாம் மைடின் மீரா இந்த முடிவை அறிவித்து, விசாரணையைத் தொடர்ந்து ஜூன் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதி வாக்காளர் மாற்றங்கள் மலேசிய அரசியல் சாசனத்திற்கு முரணானது என வழக்கு தொடுத்துள்ள ஒரு குழுவினரை வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் பிரதிநிதிக்கின்றார்.

இந்த இடைக்காலத் தடை மலாக்கா மாநிலத்திற்கு மட்டுமே உரியதாகும் என்றும் அம்பிகா சீனிவாசன் தெரிவித்திருக்கின்றார்.