Home Featured நாடு பூச்சோங் கொள்ளை, பாலியல் சம்பவம்: இருவரின் அடையாளம் தெரிந்தது!

பூச்சோங் கொள்ளை, பாலியல் சம்பவம்: இருவரின் அடையாளம் தெரிந்தது!

732
0
SHARE
Ad

Puchongrapecaseபூச்சோங் – கடந்த வியாழக்கிழமை பூச்சோங் பண்டார் கின்ராராவில் நடந்த கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவரைக் காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது.

சில தினங்களுக்கு முன் நட்பு ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றில், இரு ஆடவர்கள் சூதாட்ட மையத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்வதும் போலான காட்சிகள் பதிவாகியிருந்தது.

கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தான் அவர்கள் இருவரும் அங்கு சென்றதாகக் காவல்துறை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

இது குறித்து செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் மெகாட் மொகமட் அமினுடின் மெகாட் அலியாஸ் கூறுகையில், அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டிருக்கும் காவல்துறை, இன்னும் கைது செய்யவில்லை என்றும், அவர்கள் இருவரையும் தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து அந்த சூதாட்ட மையத்தின் உரிமையாளர், கடந்த சனிக்கிழமை தான் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது காவல்துறையினரின் தடுப்புக்காவலில் இருப்பதாகவும் செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் மெகாட் மொகமட் அமினுடின் மெகாட் அலியாஸ் கூறியதாக பிரீ மலேசியா டுடே இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.