Home Featured நாடு மே 19-இல் இரு மொழித் திட்டத்திற்கு எதிராக அமைதிப் பேரணி

மே 19-இல் இரு மொழித் திட்டத்திற்கு எதிராக அமைதிப் பேரணி

1405
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “மே 19”  இயக்கத்தின் முன்னெடுப்பில் ஏறத்தாழ 139 அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆதரவோடு நாடு தழுவிய அளவில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பங்கெடுப்பில் எதிர்வரும் 19 மே 2017ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் புத்ரா ஜெயாவில் ஜெயாவில் கல்விஅமைச்சின் முன் ஓர்அமைதிப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

dlp-opposition-meeting-19052017“மே 19” அமைதிப் பேரணி போராட்டக் குழுவினர்…

இதன் தொடர்பில் ‘மே 19’ அமைதிப் போராட்டக் குழுவினர் விடுத்திருக்கும் பத்திரிக்கை அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றனர்:-

#TamilSchoolmychoice

“கடந்த 07 பிப்ரவரி 2017 அன்று இருமொழி பாடத் திட்டத்தைத் தமிழ் பள்ளிகளிலிருந்து அகற்றக் கோரி கல்வி அமைச்சிடம் மனு ஒன்று  வழங்கப்பட்டது. 23 பிப்ரவரி 2017 ஆம் நாள் கொண்ட கடிதத்தின் வழியாக கல்வி அமைச்சு இரு மொழி பாடத் திட்டத்தில் அரசு நிர்ணயம் செய்த அடைவு நிலைகளை அடையாத தமிழ்ப்பள்ளிகள் இந்ததிட்டத்தில் இடம் பெறமுடியாது என்றும், அப்படியே இடம் பெற்று இருந்தாலும் உடனடியாக விலகவேண்டும் என்றும் பதிலளித்து இருந்தது.

இந்த பதிலின் தொடர்ச்சியாகவும் இருமொழி பாடத்திட்டம் மாணவர்களுக்கும் தமிழ்வழி கல்விக்கும் விளைவிக்க கூடிய பாதகங்களை ஆய்வுபூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் தரவுகளின்அடிப்படையில் சுட்டிக்காட்டி இத்திட்டத்தைத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்துஅகற்றக் கோரி இரண்டாவது மனு ஒன்று எதிர்வரும் 19 மே 2017 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கல்வி அமைச்சரிடம் வழங்கப்படவுள்ளது.

இந்த மனுவில், நாடுத ழுவிய அளவில் நடத்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட மக்கள் சந்திப்புகளின் வழி பெறப்பட்ட தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.”

அவற்றுள்சில:-

1.தமிழ்ப்பள்ளியின் உயர்வுக்கும் உயிரோட்டத்திற்கும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விதான் இருக்கவேண்டும்.

2.அறிவியல் – கணிதப் பாடங்களை ஆரம்பப்பள்ளிகளில் தமிழில்தான் போதிக்க வேண்டும். ஆய்வுகள் இதை உறுதிபடுத்துகின்றன.

3.ஆங்கிலம்முக்கியம். அதை வலுப்படுத்த MBMMBI கொள்கையின் கீழ் உள்ள தமிழ்க் கல்வியைப் பாதிக்காத அனைத்து வியூகத் திட்டங்களையும் தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கம் செய்யவேண்டும்.

4.தமிழ்ப் பள்ளிகளுக்கான DLP திட்டம் MBMMBI கொள்கைகளுக்கும், அரசமைப்பு விதிகளுக்கும் முரண்பாடாக உள்ளன.

மேற்கண்டவற்றை அமைச்சர் கவனத்தில் கொண்டு தமிழ்ப்பள்ளிகளில் DLP திட்டம் அமுலாக்கம் செய்வதை நிறுத்தவேண்டும்.

அதோடு, கடந்த மனுவின் பயனாக கல்வி அமைச்சு DLP   திட்டத்தை நிறுத்த வழங்கிய ஆலோசனையை ஏற்கத் தாமதிக்கும் பள்ளிகளுக்கு உடனடியாக நேரடிக் கட்டளை பிறப்பிக்குமாறு மனுவின் வழிகேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த அமைதிப் பேரணி தொடர்பான முன்னறிவிப்புகள் காவல்துறையிடமும் கல்விஅமைச்சிடமும் பிரதமர் இலாகாவிடமும் வழங்கப்பட்டுவிட்டது. இப்பேரணி கட்டுக்கோப்பாக முழுக்க முழுக்க பொதுமக்களின் குரலை எடுத்துரைப்பதாகவே அமையும்.

ஆகவே, தமிழ் உணர்வாளர்களையும் தமிழ்வழி கல்விமேல் நம்பிக்கை கொண்டவர்களையும் பொதுமக்களையும் அனைவரையும் புத்ரா ஜெயாவில் அணிதிரள அழைக்கின்றோம்.

மேல்விவரங்களுக்கு:-

தமிழ்இனியன்  012 434 1474 

தியாகு 016 628 5288

பாலமுரளி  013 632 0587