ரியாத் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், நேற்று திங்கட்கிழமை மதியம் 2.30 (மலேசிய நேரப்படி மாலை 7.30 மணியளவில்) சவுதி மன்னர் கிங் சல்மான் அப்துல்லாசிஸ் அல் சவுத்தின் அரண்மனையில் நடைபெற்ற விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
விருந்து உபசரிப்பிற்கு முன் சவுதி மன்னருடன், பிரதமர் நஜிப் கலந்தாலோசித்தார். இந்த விருந்து உபசரிப்பில் மலேசியத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனும் கலந்து கொண்டார்.
கிட்டத்தட்ட உலக நாடுகளைச் சேர்ந்த 50 முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்ட அராப் மற்றும் உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை சவுதியில் தொடங்கியது.
அதில் நஜிப் துன் ரசாக், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.