Home Featured தமிழ் நாடு ரஜினி இணைந்தால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி: தமிழிசை

ரஜினி இணைந்தால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி: தமிழிசை

817
0
SHARE
Ad

tamilisai-soundararajanசென்னை – நடிகர் ரஜினிகாந்த் பாஜக கட்சியுடன் இணைந்தால், தமிழகத்தில் தாங்கள் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “திரைப்படக் காட்சிகளில் வெற்றியைத் தந்த ரஜினி, தமிழகத்தில் ஆட்சியை அமைப்பதிலும் எங்களுக்கு வெற்றியைத் தருவார் என்பது எனது கருத்தாக இருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்துவதற்கான அத்தனை அடிப்படை வேலைகளையும் செய்து வருகின்றோம். என்றாலும் இன்னும் எங்களுக்குக் கூடுதல் பலம் தேவைப்படுகின்றது. அந்த பலத்தை ரஜினி நிச்சயம் தருவார் என்று நம்புகிறோம். ரஜினி பாமர மக்களிடமும் பிரபலமானவர் என்பதால் அவர் மூலம் கூடுதல் பலம் கிடைக்கும்.” என்று தமிழிசை தெரிவித்திருக்கிறார்.