Home Featured உலகம் மான்செஸ்டர் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

மான்செஸ்டர் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

852
0
SHARE
Ad

manchester-afpகெய்ரோ – வடக்கு இங்கிலாந்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, அரியான் கிராண்டே என்ற பிரபல அமெரிக்க இளம் பாடகியின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் மரணமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்கள், நட்பு ஊடகத்தில் இச்சம்பவத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

டுவிட்டரில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான ஹேஸ்டேக் ஒன்றை உருவாக்கியிருக்கும் ஐஎஸ் ஆதரவாளர்கள், மேலும் இது போன்ற சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice