ஜார்ஜ் டவுன் – கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில், வணிக வளாகத்திலுள்ள பொழுதுபோக்கு மையத்தில், அதிரடிச் சோதனை நடத்திய குடிநுழைவு இலாகா அதிகாரிகள், வெளிநாட்டினர் சிலரைச் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் மலேசியர்கள் தான் என்று கூறவே, நெகாராகு(தேசிய கீதம்) பாடச் சொல்லியிருக்கின்றனர்.
அதனை அவர்களால் பாட முடியாமல் போகவே அதனை வைத்து அவர்கள் மலேசியர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இச்சோதனையில், பினாங்கு குடிநுழைவுத் துறை அதிகாரிகள், முறையான ஆவணங்கள் இல்லாத மொத்தம் 25 வெளிநாட்டினரைக் கைது செய்தனர்.
அவர்களில் 11 பேர் வங்காள தேசத்தினர், 8 பேர் இந்தோனிசியர், 4 பேர் வியட்னாமைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என குடிநுழைவு இலாகாவின் உதவி இயக்குநர் வாஜா பந்தே நவாஸ் முகமது ஹனீப் தெரிவித்திருக்கிறார்.