Home Featured நாடு “சிவராசா எல்லை மீறிவிட்டார்” – சிலாங்கூர் சுல்தான் பகிரங்க அறிவிப்பு

“சிவராசா எல்லை மீறிவிட்டார்” – சிலாங்கூர் சுல்தான் பகிரங்க அறிவிப்பு

958
0
SHARE
Ad

Sultan-Selangor-sharafudin idris-shah

ஷா ஆலாம் – இன்று வெள்ளிக்கிழமை இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, தனது உத்தரவை மீறி பள்ளி வாசல் ஒன்றில் அரசியல் உரை நிகழ்த்தியதற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மீது நேரடியாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்ததோடு, சிவராசா ‘தனது செயலால் எல்லை மீறிவிட்டார்’ எனப் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

“முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி யாரும் பள்ளி வாசலை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என நான் உத்தரவிட்டிருந்தும், சிவராசா எனது உத்தரவை மீறிவிட்டார். எல்லை மீறிவிட்டார்” என சிவராசாவின் பெயர் குறிப்பிட்டு சிலாங்கூர் சுல்தான் உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பப்போவதாகக் கூறியிருக்கும் சிவராசா, தான் இன்னும் அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

“பள்ளிவாசல்கள் தொழுகைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும், மதத்தைப் பற்றி மேலும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் மையங்களாகத் திகழவேண்டும், முஸ்லீம்களை ஒன்றுபடுத்த வேண்டுமே தவிர, மாறாக பிளவுபடுத்தக் கூடாது. பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்கள் பள்ளிவாசல்களில் அரசியலை அனுமதிக்கக் கூடாது என்ற தனது உத்தரவை மதிக்க வேண்டும்” என்றும் சிலாங்கூர் சுல்தான் தனதுரையில் வலியுறுத்தினார்.