Home Featured உலகம் இலண்டன் பாலம்: 7 பேர் மரணம் – மலேசியர்கள் பாதிப்பில்லை!

இலண்டன் பாலம்: 7 பேர் மரணம் – மலேசியர்கள் பாதிப்பில்லை!

849
0
SHARE
Ad

london bridge attack

இலண்டன் – நேற்றிரவு இலண்டன் பாலம் வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மரண எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 48 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இலண்டன் பாலத் தாக்குதலில் இதுவரை மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது.

மேலும் இந்தத் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு மலேசிய அரசாங்கத்தின் அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இலண்டனிலுள்ள மலேசியர்களுடன் அணுக்கமான தொடர்புகளை மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு கொண்டிருக்கின்றது என்றும் உதவிகள், தகவல்கள் தேவைப்படும் மலேசியர்கள்  இலண்டனிலுள்ள மலேசியத் தூதரகத்தைக் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது:

High Commission of Malaysia, London
Temporary Address: 52 Bedford Row, London WC1R 4LR
Tel.: + 44 (0) 207 242 4308
E-mail: mwlondon.kln@1govuc.gov.my