Home Featured தமிழ் நாடு சசியைச் சந்தித்த பின் அதிரடி முடிவுகளை எடுப்பாரா தினகரன்?

சசியைச் சந்தித்த பின் அதிரடி முடிவுகளை எடுப்பாரா தினகரன்?

1197
0
SHARE
Ad

ttv dinakaran-29042017சென்னை – இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டிடிவி.தினகரன், கடந்த வாரம் பிணையில் வெளிவந்தார்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவைச் சந்தித்து அடுத்தக் கட்ட முடிவுகள் குறித்துக் கலந்தாலோசிக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இன்று காலை 8 மணியளவில் சென்னை பெசண்ட் நகர் வீட்டில் இருந்து தினகரன், பெங்களூர் கிளம்பிச் சென்றார்.

#TamilSchoolmychoice