Home Featured வணிகம் ஏர் ஆசியாவிற்கு இரண்டு விருதுகள்!

ஏர் ஆசியாவிற்கு இரண்டு விருதுகள்!

956
0
SHARE
Ad

tony-fernandes-airasia1கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற, ஆசியா, ஆஸ்டிரலாசியா உலகப் பயண விருது விழா 2017-ல், ஏர் ஆசியா நிறுவனத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.

ஆசியாவின் முதல் நிலை மலிவுக் கட்டண விமான நிறுவனம் என்ற பிரிவிலும், முதல் நிலை விமானப் பணியாளர்கள் பிரிவிலும் ஏர் ஆசியாவிற்கு இரு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்போட்டியில், ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ஃபயர்பிளை, கோ ஏர் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றிருந்தன. எனினும், ஏர் ஆசியா அவைகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.