Home Featured நாடு எம்பிஐ ‘உயர் அதிகாரி’ கைது: 27 மில்லியன் ரிங்கிட் முடக்கம்!

எம்பிஐ ‘உயர் அதிகாரி’ கைது: 27 மில்லியன் ரிங்கிட் முடக்கம்!

891
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – எம்பிஐ குரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், வங்கிக் கணக்கில் இருந்து 27 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, எம்பிஐ குழுத்தின் உயர் அதிகாரி, கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த அதிரடிச் சோதனையை பேங்க் நெகாரா, காவல்துறை மற்றும் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து உள்ளூர் வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு நடத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இது குறித்து அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் சுருக்கமான தகவலில், நேற்று திங்கட்கிழமை பினாங்கு, கெடாவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சந்தேக நபரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, 688,000 ரிங்கிட் ரொக்கப்பணமும், 3 ஆடம்பர வாகனங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முன்பு கடந்த மே 31-ம் தேதி, நடத்தப்பட்ட சோதனையில் எம்பிஐ குழுமத்துடன் தொடர்புடைய சில இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 91 வங்கிக் கணக்குகளில் இருந்த 177 மில்லியன் ரிங்கிட் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.