லண்டன் – நேற்று திங்கட்கிழமை, லண்டனின் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை முடித்துவிட்டுத் திரும்பிய முஸ்லிம்கள் மீது, ஆடவர் ஒருவர் வாகனத்தை மோதினார்.
இதில், 10 முஸ்லிம்கள் காயமடைந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் டாரென் ஒஸ்பார்ன் என்ற 47 வயதான நபர் என்றும், சிங்கப்பூரில் பிறந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது.
வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கார்டிஃப் என்ற பகுதியில் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் அந்நபர் வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், டேரெனை லண்டன் காவல்துறை கைது செய்து விசாரணை செய்த போது, தான் நிறைய முஸ்லிம்களை கொல்ல நினைப்பதாக டேரென் தெரிவித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.