சிங்கப்பூர் – உலக அளவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்தால், சிங்கப்பூருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் என முழுவதும் நம்பிவிடமுடியாது என சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் தெரிவித்திருக்கிறார்.
துணை போலீஸ் படையைச் சேர்ந்த இரண்டு சிங்கப்பூரர்கள், தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதை லீ சியாங் லூங் சுட்டிக் காட்டினார்.
மேலும் நிறைய நாடுகளை அச்சுறுத்தி வரும் தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்று கூறிய லீ, அண்மையில் லண்டன் உள்ளிட்ட நாடுகளில் நடந்த வாகனத் தாக்குதல், கத்திக் குத்து போன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டினார்.
அவை பெரிய அளவிலான சம்பவங்கள் இல்லை என்றாலும், உலகம் அதனை அடிக்கடி பார்த்து வருகின்றது என்று செய்தியாளர்களிடம் லீ தெரிவித்தார்.