Home Featured இந்தியா மீராகுமார்: எதிர்க்கட்சிகளின் அதிபர் வேட்பாளர்!

மீராகுமார்: எதிர்க்கட்சிகளின் அதிபர் வேட்பாளர்!

1199
0
SHARE
Ad

புதுடில்லி – இந்திய அதிபருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக ராம்நாத் கோவிந்த் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை முன்மொழிந்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த பாபு ஜகஜீவன்ராமின் மகளான மீராகுமாரும் தலித் பிரிவைச் சார்ந்தவர் என்பதால், இந்திய அதிபருக்கான போட்டி இரு தலித் பிரமுகர்களுக்கு இடையிலான போட்டியாக உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

மீராகுமாரின் பெயரை இன்று மாலை புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.