Home Featured நாடு சுங்கை சிப்புட் எழுத்தாளர் பூ.அருணாசலம் காலமானார்

சுங்கை சிப்புட் எழுத்தாளர் பூ.அருணாசலம் காலமானார்

1383
0
SHARE
Ad

சுங்கை சிப்புட் – மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சுங்கை சிப்புட் பூ.அருணாசலம் (படம்) நேற்று வியாழக்கிழமை (22.06.17) மாலை மணி 6.30 அளவில் காலமானார்.

தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்துடன் நீண்ட காலம் தொடர்பு கொண்டிருந்த பூ.அருணாசலம், முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தனுடன் நெருக்கமாகப் பழகியவர். சம்பந்தனைப் பற்றிய பல அரிய தகவல்களையும், செய்திகளையும் அவ்வப்போது பூ.அருணாசலம் எழுதி வெளியிட்டு வந்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த பூ.அருணாசலம் பாராட்டி கௌரவிக்கப்பட்டபோது…( படம்: நன்றி – மோகன் பெருமாள் முகநூல் பக்கம்)

அதேவேளையில் மலேசியத் தமிழ் இலக்கிய உலகிலும் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும், மேலும் பல தளங்களில் எழுதக் கூடியவராகவும் திகழ்ந்தவர் பூ.அருணாசலம்.