Home Featured கலையுலகம் ஹாலிவுட்டில் ஷங்கரின் ‘2.0’ திரைப்பட விளம்பர பலூன்!

ஹாலிவுட்டில் ஷங்கரின் ‘2.0’ திரைப்பட விளம்பர பலூன்!

1031
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் ‘2.0’ திரைப்படத்தின் விளம்பர பலூன் அமெரிக்காவின் ஹாலிவுட்டில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

லைக்கா தயாரிப்பில் சுமார் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதன் முதற்கட்டமாக 100 அடி உயரம் கொண்ட ராட்சத பலூன் ஒன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

உலகில் எங்கெல்லாம் பலூர் திருவிழா நடக்கிறதோ அங்கெல்லாம் இந்த விளம்பர பலூனைப் பறக்கவிடவிருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாவதாக இருந்து பின்னர் அத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.