சுங்கைப்பட்டாணி – பிரதமர் துறையின் கீழ் செயல்படும் எஸ்.ஐ.டி.எப். (SITF) எனப்படும் இந்தியர்களுக்கான சிறப்பு அமலாக்க நடவடிக்கைப் பிரிவின் புதிய சேவை மையம் கெடா, சுங்கைப்பட்டாணியில் அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மஇகா தேசியத் தலைவரும், இந்தியர் புளுபிரிண்ட் எனப்படும் மலேசிய இந்தியர் வியூகச் செயல் திட்டத்தின் அமலாக்கச் செயற்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்த சேவை மையத்தைத் திறந்து வைத்தார்.
நாடு முழுமையிலும் 10 சேவை மையங்களை நிர்மாணிக்க எஸ்.ஐ.டி.எப் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சேவை மையங்களை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு பலனடைய வேண்டும் என டாக்டர் சுப்ரா சுங்கைப்பட்டாணி சேவை மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்.
