Home Featured கலையுலகம் ‘பெண்கள் விசயத்தில் பரணி’ – அமித் சொல்லும் தகவல்!

‘பெண்கள் விசயத்தில் பரணி’ – அமித் சொல்லும் தகவல்!

1564
0
SHARE
Ad

Baranibigbossசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து வருபவர்களுக்கு நேற்றைய நிகழ்ச்சி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம், போட்டியாளர்களில் ஒருவரான பரணியை மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனிப்படுத்தியதோடு, அவருக்கு மனநலம் சரியில்லாமல் போய்விட்டதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பரணியின் காதுபடவே பேசினர்.

மற்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னைப் பற்றி கிசுகிசுப்பதையும், தரக்குறைவாகப் பேசுவதையும் பார்த்த பரணி, மன உளைச்சலின் உச்சத்திற்குச் சென்றதோடு, வீட்டின் சுவறில் ஏறி வெளியே குதிக்கவும் முயற்சி செய்தார்.

#TamilSchoolmychoice

பின்னர், பிக்பாசால் அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

amit pargav-star vijayஇந்நிலையில், பரணியுடன் ஏற்கனவே ‘அச்சம் தவிர்’ என்ற நிகழ்ச்சியில் பணியாற்றிய தொலைக்காட்சி நடிகரான அமித்  பார்கவ் (படம்), தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் வந்து பரணி குறித்து சில விசயங்களைக் கூறினார்.

அதாவது, பரணி தனக்கு நெருங்கிய நண்பர் இல்லை என்றாலும் கூட, ‘அச்சம் தவிர்’ நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றிய போது, அவர் பெண்கள் விசயத்தில் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்வார் என்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது என்று கூறினார்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில், பரணியால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று போட்டியாளர்கள் அனைவரும் அவரை ஏதோ பெண் பித்தன் போல் சித்தரிப்பதைப் பார்க்கும் போது தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் அமித் தெரிவித்தார்.