Home கலை உலகம் பிக்பாஸ்: ஓவியாவை ஓரம்கட்டும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ்: ஓவியாவை ஓரம்கட்டும் போட்டியாளர்கள்!

976
0
SHARE
Ad

oviya biggbosstamilசென்னை – கடந்த வாரம், போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த 4 போட்டியாளர்களில் ஒருவரான ஓவியா, மக்களிடையே கிடைத்த பேராதரவின் காரணமாகத் தப்பித்து மீண்டும் போட்டியில் இணைந்தார்.

மக்களின் வெறுப்பினைச் சம்பாதித்த ஆர்த்தி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இந்த வாரத்திற்கான வெளியேறுவோர் பட்டியலில், மீண்டும் ஓவியா இடம்பிடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பலசாலிகளை போட்டியிலிருந்து வெளியேற்றும் உத்தியின் அடிப்படையில், மக்களிடம் ஆரம்பம் முதல் நல்லபெயர் எடுத்து வரும் கணேஷ், ஓவியா ஆகிய இருவரோடு நமீதாவுக்கும் சக போட்டியாளர்கள் நாமினேசன் செய்திருக்கின்றனர்.

இதனால் இந்த வாரம் கணேஷ், ஓவியா, நமீதா ஆகிய மூவரில் யாராவது ஒருவர் போட்டியிலிருந்து வெளியேறுவர்.

கணேஷ் கடந்த வாரம் தலைமைப் பொறுப்பு வகித்ததில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதால், அவரை போட்டியிலிருந்து வெளியேற்ற சக போட்டியாளர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.

அதே போல், ஓவியா எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிரித்துக் கொண்டே இருப்பது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் கூட, சக போட்டியாளர்கள் அவரை வெறுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

நமீதா மற்றவர்களோடு எதிலும் கலந்து கொள்ளாமல், சாப்பிடுவதும், தூங்குவதுமாக இருப்பது மற்றவர்களை அதிருப்தியடையச் செய்திருக்கிறது. குறிப்பாக, நமீதா மீதி சாப்பாட்டுடன் இருக்கும் தட்டு, கடித்த ஆப்பிள் ஆகியவற்றை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பழக்கம் கொண்டிருப்பதால் அது பலரையும் எரிச்சலடையச் செய்திருக்கிறது.

எனவே இந்த வாரம், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதைப் பொறுத்து, மூவரில் யாராவது ஒருவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவர்.