Home கலை உலகம் பிக்பாஸ்: வலியால் கதறிய ஜூலி! சிலையாய் நின்ற பெண்கள்!

பிக்பாஸ்: வலியால் கதறிய ஜூலி! சிலையாய் நின்ற பெண்கள்!

1017
0
SHARE
Ad

Bigbossljulieசென்னை – பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கபடி விளையாட்டில், போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு வலியால் துடித்தார்.

அப்போது சினேகன், சக்தி உள்ளிட்ட ஆண்கள் அவருக்கு உடனடியாக முதலுதவிகள் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், காய்த்ரி, நமீதா, ரைசா உள்ளிட்ட மூவரும் சிலையாக நின்றபடி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

அதிலும் குறிப்பாக ரைசா, அப்போது தான் தன்னை கண்ணாடியில் அழகு படுத்திக் கொண்டிருந்தார்.

ஜூலி, தான் வெளியேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க அவ்வாறு நடிக்கிறார் என்று காய்த்ரியும், நமீதாவும் உறுதியாக நம்புகின்றனர்.

இதனிடையே, பரணியை ஒதுக்கி வைத்தது போல், பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலவர்கள் ஓவியாவை வெறுக்கத் தொடங்கியிருப்பதோடு, அவரைப் பற்றி கடுமையாக புறம் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஓவியா தனது யாரையும் சட்டை செய்யாத குணத்தின் மூலம் மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருகின்றார்.