Home கலை உலகம் மதம் மாறினாரா அக்‌ஷரா? – கமல்ஹாசன் வாழ்த்து!

மதம் மாறினாரா அக்‌ஷரா? – கமல்ஹாசன் வாழ்த்து!

1269
0
SHARE
Ad

Aksharahassanசென்னை – உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷராஹாசன் புத்த மதத்திற்கு மாறிவிட்டதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஹாய்.. அக்‌ஷு.. மதம் மாறிவிட்டாயாமே? அப்படி இருந்தால் எனது அன்பும், வாழ்த்துகளும். மதங்களையும் கடந்து அன்பு செலுத்துவோம். மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அக்‌ஷராஹாசன் தற்போது அஜித்துடன் ‘விவேகம்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.