புதுடெல்லி – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது, தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றியது, பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செயதது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய இந்திய அரசு, அவரைக் கைது செய்யத் தேடி வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து வெளியேறிய ஜாகிர், மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் தஞ்சமடைந்தார்.
இதனிடையே, விசாரணைக்கு உதவும் படி இந்தியா பலமுறை ஜாகிருக்கு நோட்டீஸ் அனுப்பியும் கூட, ஜாகிர் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், ஜாகிரின் கடப்பிதழை அண்மையில் இந்தியா இரத்து செய்தது. தற்போது அடுத்தக்கட்டமாக ஜாகிரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது.