Home கலை உலகம் பிக்பாஸ் வீட்டில் பிந்து மாதவி புதிதாக இணைந்தார்

பிக்பாஸ் வீட்டில் பிந்து மாதவி புதிதாக இணைந்தார்

1482
0
SHARE
Ad

Bindu-Madhavi-சென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தின் விஜய் ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு பிரபல நடிகையான பிந்து மாதவி இணைந்து கொண்டார்.

அவர் ஒரு பல்லக்கில் தூக்கி வரப்பட்டு, மேடையில் அறிமுகம் கண்டவுடன் சுமார் ஐந்து நிமிடங்கள் தனது கவர்ச்சிகரமான நடனத்தை வழங்கினார்.

பின்னர் கமலுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். வீட்டின் உள்ளே நுழைவதற்கு முன்னர் அவர் தனக்குப் போட்டியாக இருக்கப் போவது கண்டிப்பாக ஓவியாதான் என்று கமலிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒரு பல்லக்கில் தூக்கி வரப்பட்ட நிலையில் பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிற்குள் நடனக் குழுவினரின் ஆட்டத்துடன் கலகலப்பாக நுழைந்தார். அனைவரும் அவரை வரவேற்றனர்.

கவர்ச்சியும் அழகும் நிறைந்த பிந்து மாதவி புதிய சில்க் சிமிதா என பலமுறை ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.

பிந்து மாதவியின் வருகையால் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சியும், கலகலப்பும், சச்சரவுகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு